பயங்கர விபத்து; கப்பல் மோதியதால் நிலைகுலைந்து விழுந்த பாலம் - ஆற்றில் பலர் மாயம்!
சரக்கு கப்பல் மோதியதால் பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பயங்கர விபத்து
அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் 2.6 கி.மீ நீளம் கொண்டது. இந்நிலையில், நள்ளிரவில் இந்த பெரிய பாலத்தின் அடியில் ஒரு சரக்கு கப்பல் சென்றுகொண்டு இருந்தது.
சிங்கப்பூர் கொடியை கொண்ட டாலி என்ற பெயரிடப்பட்ட இந்த சரக்கு கப்பல் பால்டிமோர் வழியாக இலங்கையின் கொழும்பு நகருக்கு சென்று கொண்ட்து இருந்ததாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
விழுந்த பாலம்
அப்போது திடீரென அந்த கப்பல் பால்டிமோர் மீது மோதியதால் பாலம் இடிந்து விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இதை தொடர்ந்து, பாலம் இடிந்ததில் 10 பேர் ஆற்றில் விழுந்தனர் எனவும் ஏராளமான கார்கள்,வாகனங்கள் ஆற்றில் விழுந்து மூழ்கியது எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாலத்தின் இரு முனைகளும் அடைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிகாலை 1.35 மணியளவில் விபத்தில் சிக்கியவர்களை குறித்து தகவல் வாந்ததால் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மேயர் கூறியுள்ளார்.