ஊழியரை இழுத்துக் கொண்ட விமான எஞ்சின் - கொடூரமாக உயிரிழந்த பரிதாபம்!
விமானத்தின் எஞ்சினுக்குள் இழுக்கப்பட்ட நபர் உடல் சிதைந்து உயிரிழந்தார்.
எஞ்சின் அழுத்தம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இருந்து சான் ஆன்டோனியோ, டெக்சாஸ் விமான நிலையத்திற்கு டெல்டா நிறுவனத்தை சேர்ந்த விமானம் வந்திறங்கியது.
பயணிகள் இறங்கிய பின்னரும், விமானத்தின் ஒரு எஞ்சின் சுற்றிக் கொண்டே இருந்துள்ளது. இதனை யூனிஃபை நிறுவனத்தை சேர்ந்த பணியாளர் ஒருவர் கவனிக்கவில்லை.
ஊழியர் பலி
தொடர்ந்து, விமானத்தின் அருகே சென்றபோது அதிக அழுத்தம் காரணமாக பணியாளரை எஞ்சின் உள்ளே இழுத்துக் கொண்டது. அதில் அவர் உடல் சிதைந்து உயிரிழந்துள்ளார்.
உடனே, அந்த ஊழியரின் உடலை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.