தலைக்கேறிய போதை...நடுவானில் பறந்த விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற நபரால் பரபரப்பு
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் எமர்ஜென்சி கதவை நபர் ஒருவர் குடிபோதையில் திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
எமர்ஜென்சி கதவை திறக்க முயன்றதால் பரபரப்பு
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 6E 308 என்ற விமானம் காலை 7.56 மணியளவில் பெங்களூரு புறப்பட்டது.
அப்பொழுது நடுவானில் விமானம் சென்று கொண்டிருக்கையில் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் குடிபோதையில் அவவச கால வழியின் கதவை திறக்க முயன்றுள்ளார்.
இதனை கவனித்த விமான பணியாளர்கள் உடனடியாக கேப்டனுக்கு தகவல் அளித்து பயணிகளை எச்சரித்தனர்.
பயணி மீது வழக்குப்பதிவு
இதையடுத்து விமானம் பெங்களூருவில் தரையிறங்கியதும், குற்றம் சாட்டப்பட்டவர் மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் (சிஐஎஸ்எஃப்) ஒப்படைக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் அவசர கதவைத் திறக்க முயன்ற பயணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.