2வது கணவர்; 46 வயதில் கர்ப்பம் - முதல் கணவர் இந்த நடிகரா, ஊர்வசியின் மறுபக்கம்!
நடிகை ஊர்வசியின் மகள் புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகை ஊர்வசி
இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஊர்வசி. அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
மலையாள நடிகர் மனோஜ் என்பவரை 2000-ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 1 மகள் உள்ளார். எட்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
ஃபோட்டோ வைரல்
மகள் தந்தையுடன் சென்றுவிட்டார். அதன்பின், அவரது சகோதரியும் நடிகையுமான கல்பனாவின் இறப்பு அவரை வெகுவாக பாதித்தது. அதன்பின், சிவபிரசாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
தன்னுடைய 46 வயதில் இவர் ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகி இருந்தார். ஒரு தற்போது படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாக உள்ளார். சமீபத்தில், அப்பத்தா என்ற படத்தில் நடித்திருந்தார். இது இவரது 700வது படம்.
இந்நிலையில், ஊர்வசி தன்னுடைய மகள், மகன் மற்றும் கணவர் ஆகிய அனைவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த ஃபோட்டோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.