24 கேரட் தங்க கேக் - லெஜெண்ட் பட நடிகையின் அலப்பறை..கேக் விலை தெரியுமா..?
நடிகை ஊர்வசி ரவ்துலா தங்க கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
ஊர்வசி ரவ்துலா
ஹிந்தி பட உலகத்தில் முக்கிய நடிகையாக வளம் வருபவர் ஊர்வசி ரவ்துலா. தமிழில் லெஜெண்ட் சரவணன் அருள் நடித்த "தி லெஜண்ட்" படத்தில் அறிமுகமானார்.

தொடர்ந்து பிஸியான நடிகையாக வளம் வரும் இவர், தனது பிறந்தநாளை மிகவும் பிரமாண்டமாக கொண்டாடினார். அது தொடர்பான படங்கள் வெளியாகி பெரும் வைரலாகி வருகின்றது.
கேக்
தன்னுடைய 30-வது பிறந்தநாளை அவர் படப்பிடிப்பு தளத்தில் பாடகரான ஹானி சிங்குடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.
இவை கவனத்தை ஈர்க்க காரணம் என்னவென்றால், 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட கேக்கை தான் ஊர்வசி ரவ்துலா வெட்டி கொண்டாடியிருக்கிறார்.

தங்க கேக்கின் விலை மட்டும் ரூ.3 கோடி என்றும் பாடகர் ஹானி சிங் இந்த கேக்கை நடிகை ஊர்வசி ரவ்துலாவுக்கு பரிசாக அளித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan