இந்த பொண்ணு கூட நடிக்க முடியாது; மறுத்த விஜயகாந்த் - நடிகை ஊர்வசி பளீச்!
நடிகர் விஜயகாந்த் குறித்து பல தகவல்களை ஊர்வசி பகிர்ந்துள்ளார்.
நடிகை ஊர்வசி
தமிழில் இயக்குநர் பாக்கியராஜின் முந்தானை முடிச்சில் தனது 13 வயதில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. சிறந்த குணச்சித்திர நடிகைகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.
2013 ல் சிவ பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் ஊர்வசி அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
விஜயகாந்த் கிண்டல்
“ஐயோ இந்த பொண்ணு கூட எல்லாம் என்னால நடிக்க முடியாது சார் நான் தங்கச்சி தங்கச்சின்னு அவங்கள கூப்பிட்டேன் என விஜயகாந்த் கூறினார். அதனால் தான் காதல் காட்சிகள் வரும்போது அவர் என்னை உற்றுப் பார்க்க மாட்டார். மேம்போக்காக நடித்து விடுவார்.
அவருடன் ஒரு படமோ இரண்டு படமோ தான் நான் பண்ணியிருக்கேன். அதே மாதிரி என்னை பார்த்து அநியாயத்துக்கு இந்த பொண்ணு வெள்ளையா இருக்கே நான் எப்படி தெரிவேன் அப்படின்னு கிண்டலாக பேசுவார். அவர் அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பார்.
அது அவருடைய ஷூட்டிங் ஸ்பாட் ஆக இருந்தாலும் சரி மற்ற ஷூட்டிங் ஸ்பாட் ஆக இருந்தாலும் சரி அவருடைய தலைமையில் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.