அந்த பிரச்சினையால் அவதிப்படுகிறேன்; யாராவது தீர்வு சொல்லுங்கள் - மனிஷா கொய்ராலா வேதனை

Manisha Koirala Headache Tamil Actress
By Karthikraja Nov 13, 2024 03:30 PM GMT
Report

கடும் தலைவலியால் அவதிப்படுவதாக நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

மனிஷா கொய்ராலா

நடிகை மனிஷா கொய்ராலா பம்பாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் உயிரே, முதல்வன், பாபா, மாப்பிளை ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். 

manisha koirala

கடந்த 2012 ஆம் ஆண்டு கர்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், அதன் பிறகு அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை பெற்று மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். 

4 வருடங்களாக கோமாவில் உள்ள சத்யராஜ் மனைவி - மகள் திவ்யா உருக்கமான பதிவு

4 வருடங்களாக கோமாவில் உள்ள சத்யராஜ் மனைவி - மகள் திவ்யா உருக்கமான பதிவு

தலைவலிக்கு தீர்வு

தற்போது கடுமையான தலைவலியால் அவதிப்படுவதாகவும் அதற்கு தீர்வு வேண்டுமென்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்நிலையில் தான் மாதம் ஒரு முறை தீவிர தலைவலியால் பாதிக்கப்படுவதாகவும், அது ஏன் என்று தெரியாமல் மர்மமாக உள்ளது.

இதற்கு காரணம் நீரிழப்பா, தூக்கமின்மையா, மோசமான உணவா அல்லது மன அழுத்தமா? அல்லது மேலே உள்ள அனைத்துமா? இதற்கு என் தீர்வு, எல்லாத்தையும் நிறுத்தி விட்டு இசையை கேட்பது, லேசான உணவு, நிறைய நீரேற்றம் ஆகியவற்றை செய்வேன்.  

வேறு யாராவது இதை அனுபவிக்கிறார்களா? நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்? இந்த சுழற்சியை உடைக்க நான் உறுதியாக இருக்கிறேன். உங்கள் உதவிக் குறிப்புகளைப் பகிர்வது எனக்கு பயனுள்ளதாக இருக்கும்" என தெரிவித்துள்ளார். நெட்டிசன்கள் தங்களுக்கு தெரிந்த மருத்துவ குறிப்புகளை கமெண்ட் செக்சனில் தெரிவித்து வருகின்றனர்.