கமல் அப்போவே அப்படி செய்தார்.. பயந்து நடுங்கிய நடிகை - ஊர்வசி வெளிப்படை பேட்டி!

Vinothini
in பிரபலங்கள்Report this article
ஊர்வசி கமல்ஹாசன் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை ஊர்வசி
கேரளாவைச் சேர்ந்த நடிகை ஊர்வசி, இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், தமிழ் மொழிகளில் ஒரு காலகட்டத்தில் டாப் கதாநாயகியாக வலம் வந்தார். இவரது நகைச்சுவை பேச்சு மற்றும் இவரது நடிப்பினால் பல ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
இவர் நடிகர் பாக்யராஜ் உடன் இணைந்து நடித்த தனது முதல் படமான முந்தானை முடிச்சு படத்தில் ரசிகர்களை கவர்ந்தார். பின்னை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்பொழுதும் இவர் பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், நடிகை ஊர்வசி பேட்டியில் கமல்ஹாசனுடன் நடித்த படத்தில் நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். அதில், "ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் மதிய உணவு நேரத்தின் போது ஒன்றாக அமர்ந்து சாப்பிட அனைவரும் தயாரானோம். அப்பொழுது கமல் குறுக்கிட்டு உடனே சாப்பிட வேண்டாம் ஒரு ஸ்பெஷல் ஐட்டம் வந்து கொண்டிருக்கிறது வந்த பின்பு சாப்பிடலாம் என கூறினார்.
அந்த ஐட்டம் பார்ப்பதற்கு நன்கு பொரித்த கனவாய் மீன் போல வட்ட வட்ட துண்டுகளாக அழகாக இருந்தது. நான் அதை சாப்பிடலாம் என நினைத்த பொழுது உடன் அமர்ந்திருந்த நடிகை அனுராதா மெதுவாக என் காதின் அருகில் வந்து சாப்பிட்டு விடாதே இது பாம்பு கறி என்று என்னை அலர்ட் செய்தார். இதைக் கேட்டவுடன் அதிர்ச்சியில் நான் என்னது பாம்புக்கறியா? என்று கொஞ்சம் சத்தமாகவே கத்தி விட்டேன்.
உடனே கமல் பாம்பு கறியா.. யார் சொன்னது? என்று சுற்றி இருந்தவர்களை பார்த்து கேட்டு விட்டு,நைசாக அவர்களிடம் கண்ணால் சைகை செய்து பாம்பு கறி என்பதை கூற வேண்டாம் என கூறினார். அதைப் பார்த்தவுடன் நான் அந்த இடத்திலிருந்து ஓடி விட்டேன். கமல் அந்த சமயத்திலேயே பாம்பு கறியை அசால்டாக சாப்பிட்டதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்" என்று கூறியுள்ளார்.