பெண்களுக்கு ரூ.1000; வீட்டிற்கே வரப்போறாங்க - இதெல்லாம் ரொம்ப முக்கியம்!
வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் கள ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உரிமை தொகை
ஒரு கோடி பெண்களுக்கு இந்த திட்டத்தின்படி உரிமை தொகை வழங்கப்பட உள்ளதாகவும், வரும் அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 24 முதல் ஆக.4-ம் தேதி வரையும் முதற்கட்ட முகாமிலும், ஆகஸ்ட 5 முதல் ஆகஸ்ட 12-ம் தேதி வரை இரண்டாம் கட்ட முகாமிலும் ஏராளமான பெண்கள் விண்ணப்பித்தனர்.
கள ஆய்வு
இதில், ஒட்டுமொத்தமாக 1.54 கோடி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் மற்றும் ஓய்வூதியம், உதவித்தொகை பெறும் குடும்பத்தில் உள்ள பெண்கள் விண்ணப்பிப்பதற்கான 3 நாள் சிறப்பு முகாம் (ஆக 18, 19, 20) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படியே தமிழகம் முழுவதும் கடந்த 18-ம் தேதி சிறப்பு முகாம்கள் தொடங்கின. தற்போது விண்ணப்ப பதிவு முடிந்துள்ள நிலையில், வருவாய் துறையினர், மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் , எந்த வீடுகள் தொடரபாக விவரங்கள் தேவைப்படுகிறதோ
அந்தந்த வீடுகளுக்கு சென்று கள ஆய்வில் ஈடுபட உள்ளார்கள். வீடுகளில் களஆய்வுக்கு பின்னர் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.