பெண்களுக்கு மாதம் ரூ.1000; யாருக்கெல்லாம் கிடைக்காது - அமைச்சர் முக்கிய விளக்கம்!
உரிமை தொகை குறித்து அமைச்சர் எ.வ. வேலு முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.
உரிமை தொகை
இந்தாண்டு செப். மாதம் முதல் மகளிருக்கு உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்குக் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவங்களைக் கொடுக்கும் நடைமுறை ரேஷன் கடைகளில் நடந்து வருகிறது. இதற்கான விண்ணப்பப் படிவத்தில் மொத்தம் 13 வகையான கேள்விகள் உள்ளன. ஏற்கனவே இந்தத் திட்டத்தில் யார் தகுதி பெறுவார்கள்.
அமைச்சர் விளக்கம்
யார் தகுதி பெற மாட்டார்கள் என்பது குறித்த தகவல்களும் தனியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் ஆம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் விழா வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலு மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கினார். அதன் பிறகு பேசிய அவர், இந்த ரூ. 1000ஐ நம்பி தான் குடும்பம் நடத்த வேண்டும் என்ற சூழலில் உள்ளவர்களுக்கு நிச்சயம் இந்த தொகை வழங்கப்படும்.
அதேநேரம் வசதியானவர்களுக்கும் இது செல்வது சரியாக இருக்காது. இதன் காரணமாகத் தகுதியானவர்களுக்கு இந்த உரிமை தொகை மாதாமாதம் வரும் எனத் தெரிவித்துள்ளார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan