14 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை - மசோதா ஒப்புதல்!
14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சமூக வலைத்தள பக்கங்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள்
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாண சட்டமன்றத்தில் கடந்த மாதம் மசோதா ஒன்று நிறைவேறியது. அதில், 14 வயதுக்குட்பட்டோரின் சமூக ஊடக கணக்குகளை நீக்க வேண்டும்.
மேலும், 14 முதல் 16 வயதுக்குட்பட்டோர் பெற்றோரின் சம்மதம் பெற்றால் மட்டுமே சமூக ஊடக கணக்கு வைத்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மசோதாவுக்கு ஃபுளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
மசோதா ஒப்புதல்
சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கு பல்வேறு வழிகளில் பல இன்னல்களை ஏற்படுத்துவதாக ஆளுநர் ரான் டிசாண்டிஸ் தெரிவித்துள்ளார். இந்த சட்டம் அடுத்தாண்டு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு பக்கம் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், மறுபுறம் எதிர்காலத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை கருதி இது ஒரு நல்ல முடிவு தான் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக இணையத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.