இனி யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி? மத்திய அரசு
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யுபிஐ பரிவர்த்தனை
போன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளில்தான் மக்கள் பெரும்பாலும் பணப்பரிமாற்றம் செய்து வருகின்றனர். இதற்கு எந்த வரியும் விதிக்கப்படுவதில்லை.
ஆனால் தற்போது யுபிஐ பணப்பரிமாற்றத்துக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியானது.
மத்திய அரசு விளக்கம்
அதன்படி, அனைத்து யுபிஐ செயலிகளிலும் ரூ.2 ஆயிரத்துக்கு அதிகமான பணப்பரிமாற்றத்துக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். தொடர்ந்து, அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக இதுபற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிவு செய்வார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள மத்திய அரசு, யு.பி.ஐ. வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்வதை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். 2000 ரூபாய்க்கு மேற்பட்ட யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தொடர்பாக எந்த பரிசீலனையும் இல்லை.
எனவே, 2 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என பரவும் தகவல் பொய்யானது என தெரிவித்துள்ளது.