ஆதார் கார்டில் இது இலவசம்; 4 நாள்தான் இருக்கு - உடனே மாத்திடுங்க!
ஆதார் கார்டில் மாற்றங்கள் செய்வதற்கான கட்டணம் அறி்முகமாகவுள்ளது.
ஆதார் மாற்றம்
ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் அப்டேட்டாக இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளைஉங்களுடைய ஆதார் கார்டில் ஏதேனும் அப்டேட் செய்ய வேண்டியிருந்தால் அதை இலவசமாகவே செய்யலாம்.
நவம்பர் 14ம் தேதி வரை இந்த மாற்றங்களை செய்ய கட்டணம் இல்லை. ஆன்லைன் மூலம் எளிதாக செய்ய முடியும். நேரில் ஆதார் மையத்தில் செய்வதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இச்சேவை இனி இலவசம் கிடையாது. இனி கட்டணம் விதிக்கப்பட உள்ளது.
அப்டேட்
இதை பெற இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது. uidai.gov.in அல்லது https://myaadhaar.uidai.gov.in/genricPVC மூலம் ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடி அல்லது என்ரோல்மென்ட் ஐடி மூலம் இந்த அட்டையின் விலாசத்தை புதுப்பிக்க முடியும்.
உண்மையான கட்டணம் எவ்வளவு என்பது அரசு தரப்பால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.