10 ஆண்டு ஆதார் அப்டேட் செய்யவில்லையா? இதுவே கடைசி தேதி! மறக்காதீர்கள்...
ஆதார் கார்ட்
இந்திய நாட்டின் பிரஜை என்பதை தாண்டி ஒருவரின் அனைத்து தகவல்களையும் அறிய உதவுகிறது ஆதார் கார்ட். பள்ளியில் சேருவது முதல், திருமணம் பதிவில் நீண்டு, இறப்பு சான்றிதழ் வரை என அனைத்திற்குமே ஆதார் கட்டாயமாகியுள்ளது.
ஒவ்வொரு ஆதார் கார்ட்டிலும் ஒருவரின் பெயர், வயது, குடும்ப விவரம், அவரின் இல்லம், கை ரேகை, புகைப்படம் என அனைத்துமே அடங்கியிருக்கும். இந்நிலையில் தான், இந்த ஆதார் கார்ட்டை அப்டேட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுப்பித்து கொள்ளணும்..
வரும் செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் கடந்த 10 ஆண்டுகளாக ஆதார் விவரங்களைப் புதுப்பிக்காதவர்கள் இலவசமாகப் புதுப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுப்பிப்பதற்கு UIDAI'வின் ஆன்லைன் போர்டலான https://ssup.uidai.gov.in/ssup/ என்ற தளத்தில் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் ஆதாரை புதுப்பிக்கத் தவறினால், அது சிக்கலில் முடியலாம்.