காலாவதியாகும் ஆதார் கார்டு...வாங்கி 10 வருஷம் ஆச்சு'னு உடனே இதனை செய்யுங்க!! அரசு உத்தரவு
நாட்டு மக்கள் அனைவரும் வைத்திருக்க வேண்டிய அடிப்படை ஆதாரமாக நாட்டில் கொண்டுவரப்பட்டது ஆதார்.
ஆதார் கார்ட்
இந்திய நாட்டின் பிரஜை என்பதை தாண்டி ஒருவரின் அனைத்து தகவல்களையும் அறிய உதவுகிறது ஆதார் கார்ட். பள்ளியில் சேருவது முதல், திருமணம் பதிவில் நீண்டு, இறப்பு சான்றிதழ் வரை என அனைத்திற்குமே ஆதார் கட்டாயமாகியுள்ளது.
ஒவ்வொரு ஆதார் கார்ட்டிலும் ஒருவரின் பெயர், வயது, குடும்ப விவரம், அவரின் இல்லம், கை ரேகை, புகைப்படம் என அனைத்துமே அடங்கியிருக்கும். இந்நிலையில் தான், இந்த ஆதார் கார்ட் காலவாதியாகிவிடும் என அறிவித்துள்ளது இந்திய அரசு.
காலவாதி
அதாவது 10 ஆண்டுகளுக்கு முன் பெற்ற ஆதார் கார்டை புதிப்பிக்கலாமல் வைத்திருந்தால் அவை இப்படி கலவாதியாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார்களை தற்போதைய அடையாளச் சான்றுடன் சேர்ந்து முகவரிச் சான்றையும் புதுப்பித்து வைத்திருப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.
அவற்றிக்கான இணையதள வழிகாட்டுதலையும் அரசு தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 14, 2024 ஆம் தேதியை புதிப்பதற்கான கடைசி தேதி. myAadhaar என்ற போர்ட்டலில் ஆதார் அட்டையை இலவசமாகப் புதிப்பித்துக்கொள்ளலாம். குறிப்பிடப்பட்ட தேதிக்கு பிறகு, கட்டணம் செலுத்தி புதுப்பிக்கும் முறை வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்கள் ஆதார் கார்டுடன் பொருந்த வில்லை என்றால், முதலில் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை புதுப்பித்து, பின்னர் ஆதார் அட்டை ஆதார ஆவணங்களை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகிறது.