பிறப்பு ஆவணமாக இனி ஆதார் ஏற்றுக்கொள்ளபடாது - EPFO அதிரடி அறிவிப்பு..!
இந்தியாவில் அனைத்திற்கும் பொதுவான ஆவணமாக ஆதார் கார்டு இருந்து வருகின்றது.
இனி ஆதார் இல்லை
இந்நிலையில் தான், ஆதார் கார்டு பிறப்பு ஆவணமாக ஏற்றுக்கொள்ளமுடியாது என இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள EPFO ஆணையத்திற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) தெரிவித்துள்ளது.
இதனால் இனி, பிறந்த தேதிக்கான சரியான ஆதாரமாக எந்த ஆவணங்கள் கருதப்படும் என்பதை குறித்து தற்போது காணலாம்.
1) பிறப்புச் சான்றிதழ் - பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளரால் வழங்கப்படுவது.
2) அரசு அல்லது பல்கலைக்கழக மதிப்பெண் பட்டியல்
3) பான்கார்டு
4) அரசாங்கத்தால் வழங்கப்பட்ட குடியுரிமைச் சான்றிதழ்
5) பள்ளிக் கல்வியை விட்டு வெளியேறுதல் சான்றிதழ்
ஒரு தனித்துவமான அடையாள அட்டையாக ஆதார் இருந்தாலும், ஆதார் சட்டம், 2016 இன் கீழ் பிறந்த தேதிக்கான ஆதாரமாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது இதில் குறிப்பிடத்தக்கது.
மேலும், UIDAI இந்த முடிவை மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையரின் (CPFC) ஒப்புதலுடன் எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.