15 ஆண்டுகளாக வயிற்று வலியால் துடித்த இளம் பெண்-அறுவை சிகிச்சையில் காத்திருந்த அதிர்ச்சி!
பெய்ரேலி சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.
உத்திர பிரதேசம்
உத்திர பிரதேச மாநிலம் பெய்ரேலி பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் தனது 16 வயது முதல் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் . இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறப்படுகிறது.தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த சுழலில் கடந்த மாதம் 22ம் தேதி வயிற்று வலி காரணமாக பெய்ரேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அப்போது அந்த பெண்ணைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தபோது அதிர்ச்சியடைந்தனர். பெண்ணின் வயிற்றிலிருந்து 2 கிலோ முடியைக் கொத்தாக அகற்றி இருக்கின்றனர்.
அறுவை சிகிச்சை
இந்த முடிதான் அந்த பெண்ணின் வயிற்று வலிக்குக் காரணமாக இருந்திருக்கிறது.இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூறுகையில் : ன் அந்த பெண்ணுக்கு அரிய உளவியல் பாதிப்பு இருந்திருக்கிறது. இந்த பாதிப்புக்கு டிரைகோலோடோபேமனியா என்று பெயர்.
இதுபோன்ற பாதிப்பை உடையவர்கள் தன்னை அறியாமலே முடியைச் சாப்பிடுவார்கள். சிறுவயதிலிருந்தே இந்த பெண்ணுக்கு இத்தகைய பாதிப்பு இருந்திருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.