யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை- போலி மருத்துவரால் சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!
Youtube
Crime
Bihar
By Swetha
யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை செய்ததில் 15 வயது சிறுவன் உயிரிழந்தது அதிர்ச்சி அளித்துள்ளது.
அறுவை சிகிச்சை
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் 15 வயது சிறுவன் பித்தப்பை கல் அகற்றுவதற்காக மருத்துவமனையை நாடியுள்ளார்.
இந்த நிலையில், கல்லை அகற்றுவது எப்படி என யூடியூபைப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவரால் 15 வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
யூடியூப் வீடியோ
தங்களது ஒப்புதலின்றி 'மருத்துவர்' அஜித்குமார் பூரி அறுவை சிகிச்சையைத் தொடங்கியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போலி மருத்துவர் தலைமறைவானார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.