அண்ணியுடன் தகாத உறவு - ஆத்திரத்தில் தம்பி அண்ணனையே தீர்த்துக்கட்டிய பயங்கரம்!
தகாத உறவினால், தம்பி அண்ணனை கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகாத உறவு
உத்தரப்பிரதேசம், புர்காஜி பகுதியைச் சேர்ந்தவர் சாகர் அகமது (30). இவரது மனைவி ஆயிஷா. திடீரென கணவர் மாயமாகியுள்ளார். அதனால், கணவரை காணவில்லை என ஆயிஷா போலீஸில் புகாரளித்துள்ளார்.
தொடர்ந்து விசாரணையில், ஆயிஷா மற்றும் சாகரின் வளர்ப்பு சகோதரர் சொஹைல் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், இருவருக்கும் தகாத உறவு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
மனைவி வெறிச்செயல்
அதில், ஆயிஷாவுக்கும் சொஹைலுக்கும் நீண்ட காலமாகவே தொடர்பு இருந்துள்ளது. இது கணவருக்கு தெரியவந்த நிலையில், மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் மனைவி தொடர்பை கைவிடாவில்லை. மேலும், தகாத உறவில் நெருக்கமாக இருந்ததையும் கணவர் பார்த்துள்ளார். இதனால சண்டை முற்றியுள்ளது.
எனவே ஆத்திரத்தில் ஆயிஷாவும் சொஹைலும் சாகரை கொலை செய்ய திட்டமிட்டனர். அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை வீட்டில் இருந்த செப்டிக் டேங்க் குழியில் புதைத்துள்ளனர். அதன்பின் நாடகமாடியது தெரியவந்தது.
அதன்பின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, மனைவி மற்றும் சகோதரனை கைது செய்துள்ளனர்.