கர்ப்பமடைந்த மாணவி! விஷம் கொடுத்து கொலை செய்த கொடூர தந்தை

Tamil nadu Tiruchirappalli
By Thahir Dec 18, 2022 04:32 AM GMT
Report

மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் தந்தையே விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

குழந்தை பெற்ற மாணவி 

திருச்சி முக்கொம்பு அருகே, எலமனுாரைச் சேர்ந்தவர் கலைவாணி. 19வயதான கலைவாணி, அந்த பகுதியில் உள்ள கல்லுாரி ஒன்றில் படித்து வந்த நிலையில், தகாத உறவினால், கர்ப்பமடைந்தார்.

இந்நிலையில், முக்கொம்பு பகுதியில் பிரசவித்த குழந்தையை புதரில் வீசிச் சென்ற கல்லுாரி மாணவி கலைவாணி, குழந்தையை வீசி சென்றது யார் என்று போலீசார் விசாரணையில் இறங்கியதை அடுத்து, விஷம் குடித்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கலைவாணியின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, திருச்சி குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றார்.

Pregnant student! A cruel father who killed by poisoning

இந்நிலையில், மாணவி கலைவாணியின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மாணவியின் தந்தை மற்றும் அத்தையைப் போலீசார் கைது செய்தனர்.

விஷம் குடிக்க வைத்த கொடூரம் 

மாணவியின் தந்தை செல்வமணி உள்ளிட்ட குடும்பத்தாரிடம், போலீசார் விசாரித்தனர். மாஜிஸ்திரேட்டிடம் மாணவி கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார், மாணவியின் தந்தை செல்வமணி, 47, அத்தை மல்லிகா, 51, ஆகியோர் மாணவிக்கு கட்டாயமாக விஷம் கொடுத்து குடிக்க செய்துள்ளது தெரிய வந்துள்ளதால், இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

மாணவிக்கு வலுக்கட்டாயமாக தந்தையே விஷம் கொடுத்து கொன்ற அதிர்ச்சி தகவல் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.