வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்த அவலம் - பெண் பரிதாப பலி!

Uttar Pradesh Crime
By Sumathi Jan 23, 2023 06:44 AM GMT
Report

பெண் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்ததில் அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்றில் பேண்டேஜ் 

உத்தரப் பிரதேசம், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேந்திர சைனி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி ராதாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடர் வயிற்று வலி இருந்து வந்தது. எனவே, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்த அவலம் - பெண் பரிதாப பலி! | Up Woman Dies Doctor Left Bandage Inside Stomach

அதனைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை செய்ததில் வலி கேட்கவில்லை. அதனால் அந்த மருத்துவமனைக்கே சென்று கேட்டதில் அங்கு உரிய தீர்வு வழங்காத்தால் வேறு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்கு சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 பலி

அதில், பெண்ணின் வயிற்றுக்குள் பேண்டேஜ் இருந்துள்ளது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பேண்டேஜ் அகற்றப்பட்டது. இருப்பினும், ராதாவின் உடல் நலம் தொடர்ந்து மோசமடைந்து உயிரிழந்தார். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு, மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், உரிய விசாரணை நடத்தப்படும். றை ரீதியான விசாரணையின் படி மூன்று பேர் கொண்ட குழு சம்பவம் குறித்து விசாரிப்பதாகவும் அம்ரோஹா மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜீவ் சிங்கால் கூறியுள்ளார்.