அதிவேகத்தில் அடிபம்பில் மோதிய பைக்; வயிற்றில் சொருகிய கைப்பிடி - கொடூரம்!
அதிவேகமாக பைக்கில் வந்ததாக் அடிபம்பின் கைப்பிடி இளைஞர் வயிற்றில் சிக்கியது.
விபத்து
ஆந்திரா, கனிகிரியில் உள்ள இந்திரா காலனியை சேர்ந்த நாகராஜ். இவர் வேலை முடிந்து கனிக்கிரியில் உள்ள ராஜீவ் நகரில் மோட்டார் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் உள்ள அடிப்பம்பு மீது மோதியது. அப்போது அடிபம்பின் கைப்பிடி அவரது வயிற்றை துளைத்து உள்ளே சென்று விட்டது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.
தீவிர சிகிச்சை
அங்கிருந்தவர்கள் உடனடியாக கட்டரை கொண்டு வந்து கைப்பிடியை வெட்டி அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றிக் சிக்கி கொண்டிருந்த கைப்பிடியின் துருப்பிடித்த பாகங்கள், உலர்ந்த பெயிண்ட் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர். தற்போது அவர் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.