லுடோ: ஹவுஸ் ஓனரிடம் தன்னையே பணயம் வைத்த இளம்பெண் - கதறிய கணவன்!

Uttar Pradesh Crime
By Sumathi Dec 06, 2022 07:47 AM GMT
Report

 லுடோ விளையாட்டில் இளம்பெண் தன்னையே பணயம் வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சூதாட்டம்

உத்தர பிரதேசம், தேவ்கலி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணு, இவர் தனது கணவன் மற்றும் 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கணவர் உமேஷ் ஜெய்ப்பூரில் வேலை செய்து வருகிறார்.

லுடோ: ஹவுஸ் ஓனரிடம் தன்னையே பணயம் வைத்த இளம்பெண் - கதறிய கணவன்! | Up Woman Bets Self In Game Of Ludo

அங்கு வேலை செய்த பணத்தை வீட்டு செலவுக்காக மனைவிக்கு அனுப்பி வந்துள்ளார். ஆனால் வீட்டில் தனியாக இருந்த மனைவி அந்த பணத்தை வைத்து தனது வீட்டின் உரிமையாளருடன் லுடோ விளையாடி வந்துள்ளார்.

 மகாபாரத பாணி

இந்நிலையில், பணத்தை முழுவதும் இழந்த இளம்பெண் கடைசியில் தன்னையே பணயம் வைத்து விளையாடி உள்ளார். அதிலும் இவர் தோற்று போனதால் வீட்டின் உரிமையாளருடனேயே வாழ தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து பெண்ணின் கணவர் போலீஸில் புகாரளித்துள்ளார். அதில், "எனது மனைவி லுடோவில் தோற்றதால், எதிராக விளையாடியவருடன் சென்றுவிட்டார். தயவு செய்து எனது மனைவியை மீட்டு தாருங்கள்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.