மேக்கப் கிட்டை யூஸ் செய்த மாமியார் - ஆத்திரத்தில் மருமகள் கணவருக்கு செய்த செயல்!

Delhi Divorce
By Sumathi Jan 30, 2024 12:30 PM GMT
Report

மாமியார் தனது மேக்கப் கிட்டை பயன்படுத்தியதற்காக, மனைவி விவாகரத்து கோரிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேக்கப் கிட்

ஆக்ரா, மல்புராவில் வசித்து வரும் சகோதரர்களுக்கு 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. குடும்ப ஒற்றுமைக்காக இருவரும் சகோதரிகளாகப் பார்த்து திருமணம் செய்துள்ளனர்.

delhi divorce case

இந்நிலையில், மூத்த மருமகள் பயன்படுத்தும் மேக்கப் கிட்டை, மாமியார் அவரது அனுமதி இல்லாமல் எடுத்துப் பயன்படுத்தியுள்ளார். மேலும், மாடர்ன் ஆடைகளை அணிந்து வீட்டிற்குள் சுற்றி வந்துள்ளார்.

படிச்ச நான் எங்க... படிக்காத நீ எங்க?' : 90ஸ் கிட்ஸ்  காவியம்  சூர்யவம்சம்

படிச்ச நான் எங்க... படிக்காத நீ எங்க?' : 90ஸ் கிட்ஸ் காவியம் சூர்யவம்சம்

விவாகரத்து

இதனைப் பார்த்த மருமகள், மாமியாரிடம் சண்டையிட்டுள்ளார். தொடர்ந்து, இதுகுறித்து மாமியார் தனது மகனிடம் புகார் கூறிய நிலையில், கணவன் - மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரத்தில் கணவன் மனைவியை தாக்கியுள்ளார். அதுமட்டுமில்லாம, அவரையும் தம்பி மனைவியையும் தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

agra

அதனையடுத்து, மூத்த மருமகள் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். அதில், குடும்ப நல ஆலோசனைக்குழுவினரிடம் இந்த வழக்கு சென்ற போது, பெண்ணுக்கு அறிவுரை கூறிய நிலையிலும், கணவன் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் அதனால், கட்டாயம் விவாகரத்து செய்தே தீருவேன் எனத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.