முதலிரவில் கண்டிஷன் போட்ட மனைவி; நிறைவேற்றாத கணவன் - போலீஸில் புகார்!
மோமோஸ் வாங்கி வராததால் மனைவி கணவன் சண்டையிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
மனைவி கண்டிஷன்
உத்தரப்பிரதேசம், மல்புராவில் வசிக்கும் பெண்ணுக்கு பினாஹட்டை சேர்ந்த இளைஞருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அன்று முதலிரவில் தனக்கு மோமோஸ் பிடிக்கும்.
நீங்கள் வீட்டிற்கு இரவு வரும் போது தினமும் மோமோஸுடன் தான் வரவேண்டும் என மனைவி, கணவனுக்கு கண்டிஷன் போட்டுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த கணவன் தினமும் வாங்கி வந்துள்ளார்.
மோமோஸுக்கு சண்டை
ஆனால், அவ்வப்போது அதனை நிறைவேற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில், தான் வேலை முடிந்து வர நேரத்தில் மோமோஸ் கடை இல்லை என்றும்,
சில நாட்கள் கிடைக்காது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என கணவன் தெரிவித்துள்ளார். ஆனால், மனைவி மோமோஸுடன் வந்தால்தான் வாழ்க்கை என கறாராக கூறியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் கணவன் மோமோஸுடன் வீட்டிற்கு வருவதாக உறுதியளித்த பின் மனைவி குடும்பம் நடத்துவதாக சம்மதம் தெரிவித்துள்ளார்.