முதலிரவில் மனைவியை பார்த்து அலறிய கணவன்; மாமியாரும் உடந்தை - பகீர் சம்பவம்!
மனைவியை, திருநங்கையென அறிந்த கணவன் அதிர்ச்சியடைந்துள்ளார்.
திருமண விவகாரம்
உத்திரப்பிரதேசம், பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் 2019-ம் ஆண்டு விமர்சையாக திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து, முதலிரவில் தனது மனைவி திருநங்கையென அறிந்த நபர் தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.
மேலும் விவாகரத்து செய்யப்போவதாகவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, தான் பாலின மாற்றத்திற்கு உள்ளாகியிருப்பதை வெளியே கூறினால் பொய் வழக்கு போடுவேன் என மிரட்டியுள்ளார்.
மிரட்டிய மனைவி
இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் குடும்ப கெளரவத்திற்காக யோசித்து 4 வருடங்களை கழித்துள்ளார். இந்நிலையில், தற்போது திடீரென மனைவி மற்றும் மாமியார் மீது புகாரளித்துள்ளார். அதில், திருநங்கை மனைவியும், என் மாமியாரும், பணம் கேட்டு அடிக்கடி என்னை தாக்கி துன்புறுத்துகிறார்கள்.
என்னை 2 பேரும் சேர்ந்து, நிர்வாண வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, 20 லட்ச ரூபாய் தராவிட்டால் அந்த நிர்வாண வீடியோவை வெளியிடுவோம் என்று மிரட்டுகிறார்கள். நான் மறுக்கவும், அவர்கள் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்ந்து 4 வருடங்களால் சித்ரவதை செய்தார்கள்.
இதற்கு மேல் இந்த கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. எனவே இருவர் மீதும் நடிவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.
அதன் அடிப்படையில், விசாரித்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளனர்.