முதல் திருநங்கை விஷம் குடித்து தற்கொலை; மனைவி சீரியஸ் - அதிர்ச்சி!

Kerala Death Transgender
By Sumathi May 05, 2023 09:33 AM GMT
Report

முதல் திருநங்கை பாடி பில்டரான பிரவீன்நாத் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநங்கை தற்கொலை

திருநங்கைகள் பிரிவில் மிஸ்டர் கேரளா போட்டியில் வெற்றி பெற்றவர் பிரவீன் நாத். இவர் முன்னாள் மிஸ் மலபாரான திருநங்கை ரிஷானா ஐஷுவை திருமணம் செய்து கொண்டார்.

முதல் திருநங்கை விஷம் குடித்து தற்கொலை; மனைவி சீரியஸ் - அதிர்ச்சி! | Kerala First Transgender Bodybuilder Suicide

இந்நிலையில், விஷம் குடித்த நிலையில், பிரவீன் நாத் வீட்டில் மயங்கிக் கிடந்தார். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மன உளைச்சல்

அதனையடுத்து, அவரது மனைவியும் கரப்பான் பூச்சி மாத்திரையைத் தின்று தற்கொலைக்கு முயன்றார். தற்போது, தீவிர சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரித்ததில், பிரவீன்நாத், ரிஷானா ஐஷு இருவரும் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளப்போவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

முதல் திருநங்கை விஷம் குடித்து தற்கொலை; மனைவி சீரியஸ் - அதிர்ச்சி! | Kerala First Transgender Bodybuilder Suicide

இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தபோதும், வதந்தி பரவியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி கேரளா முதல்வர் பினராயி விஜயன், டிஜிபிபியிடம் திருநங்கைகள் சார்பாக மனுக்கள் தரப்பட்டுள்ளன.