காய்கறிகள் மீது சிறுநீர் கழித்த வியாபாரி - பகீர் சம்பவம்!

Viral Video Uttar Pradesh
By Sumathi 1 வாரம் முன்

காய்கறிகள் மீது சிறுநீரை கழித்து விற்கும் வியாபாரியின் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

காய்கறி வியாபாரி 

உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது பரேலி மாவட்டம். அங்கு உள்ள பகுதியில், ஷரீப் கான் என்கிற முதியவர் தள்ளு வண்டியில் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார்.

காய்கறிகள் மீது சிறுநீர் கழித்த வியாபாரி - பகீர் சம்பவம்! | Up Vendor Detained For Urinating On Vegetables

இந்நிலையில், இஸ்லாத் நகரைச் சேர்ந்த துர்க்கேஸ் குப்தா என்பவர் அந்த வழியாக காரில் சென்றிருக்கிறார். அப்போது 55 வயது மதிக்கத்தக்க வியாபாரி, காய்கறிகள் மீது சிறுநீர் கழிப்பதை பார்த்து இருக்கிறார்.

அதிர்ச்சி வீடியோ 

உடனே அவர் காரை நிறுத்திவிட்டு அதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்திருக்கிறார். அதனையடுத்து, அந்த வியாபாரிடம் சென்று ஏன் இப்படி மோசமாக நடந்து கொண்டீர்கள்? என்று கேட்டதற்கு, தான் அப்படி செய்யவே இல்லை என்று கூறி மறுத்திருக்கிறார்.

தொடர்ந்து, அருகில் உள்ளவர்கள் இதனைக் கண்டு விசாரித்திருக்கிறார்கள். அங்கு நடந்ததை கூறியுள்ளார் அந்த நபர் அப்போது மக்கள் நம்பவில்லை. அதன்பின் வீடியோ ஆதாரங்களை காட்டிய பின்னரே அதிர்ச்சியடைந்து வியாபாரியை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து, போலீஸாரிடம் புகார் அளித்து விசாரணை நடத்தியதில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதனால் வண்டியை ஒரு பக்கம் பிடித்துக் கொண்டு சிறுநீர் கழித்தேன் என்று சொல்லி இருக்கிறார். கைது செய்யப்பட்ட வியாபாரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என கூறப்பட்டுள்ளது.