வேகமா அடிங்க.. இஸ்லாமிய மாணவரை அடிக்க கூறிய ஆசிரியை - அதிர்ச்சி வீடியோ!
ஆசிரியர் ஒருவர் இந்து மாணவர்களை ஊக்கப்படுத்தி இஸ்லாமிய மாணவரை அடிக்க சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரையை கொடுமை
உத்திரப்பிரதேசம், முசாபர்நகரின் குப்பபூர் கிராமத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு நிகழ்ந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அதில், மாணவர்கள் தரையில் அமர்ந்திருக்கின்றனர். ஒரு மாணவர் மட்டும் ஆசிரியைக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறார். 'Jitne bhi Muslim bachche hai…' என்று ஆசிரியை கூறுகிறார்.
ஷாக் வீடியோ
ஒரு மாணவர் வந்து நின்று கொண்டிருந்த இஸ்லாமிய மாணவரின் கன்னத்தில் அடித்துவிட்டு செல்கிறார். அவருக்கு மேலும் இரண்டு மாணவர்கள் வந்து கன்னத்திலும் பின்புறத்தில் பளார் என்று அடித்துவிட்டு செல்கின்றனர்.
⤵️A video has emerged of a teacher telling children to slap a seven-year-old Muslim student in front of his classmates and asking him to be expelled because of his religion. The video was taken at a school in Uttar Pradesh, India’s most populous state on August 24. pic.twitter.com/kGp8yXYN99
— Chia Hak Thye (@HakThye) August 26, 2023
ஏன் இவ்வளவு மெதுவாக அடிக்கிறீர்கள்; வேகமாக அடியுங்கள் என்று ஆசிரியை சொல்வது வீடியோவில் கேட்கிறது. இந்த சம்பவம் பெரும் சர்சையை கிளப்பியுள்ளது. தொடர்ந்து விசாரணையில், அந்த ஆசிரியையின் பெயர் திரிப்தா தியாகி என்று தெரியவந்துள்ளது.
மேலும், ஆசிரியை போலீசார் முன்பு மன்னிப்பு கேட்டுள்ளார்.
தொடர்ந்து, ஆசிரியைக்கு எதிராக புகார் கொடுக்க விரும்பவில்லை. அந்த பள்ளிக்கு இதற்கு மேல் அனுப்பப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார்.