ஹோலி கொண்டாடிய இந்து மாணவர்கள் - பயங்கர தாக்குதலில் படுகாயம்!
ஹோலி கொண்டாடியதாக இந்து மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
ஹோலி
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் இந்து மாணவர்கள் ஒன்று திரண்டு ஹோலியை சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் 30 மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த ஒரு அமைப்பினர் இந்து மாணவர்களை ஹோலி கொண்டாடக்கூடாது என கூறினார்கள்.
இதனால் அவர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்து மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தாக்குதல்
தொடர்ந்து தாக்கியவர்காள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறி மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் அறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து துணைவேந்தர்,
பல்கலைக்கழக வளாகத்தில் ஹோலி நிகழ்ச்சி நடத்த மாணவர்கள் அனுமதி பெறவில்லை என்றும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.