ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்திய வீரர்கள்... - வைரலாகும் புகைப்படம்...!

Holi Indian Cricket Team Viral Photos
By Nandhini Mar 07, 2023 02:07 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹோலி பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்திய வீரர்கள்

இந்தியாவின் வண்ணமயமான பண்டிகைகளில் ஹோலி திருவிழாவும் ஒன்று. நாளை இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

ஹோலி பண்டிகையின் தனிச்சிறப்பு வயது வித்தியாசமின்றி அனைவரும் தெருக்களில் இறங்கி ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி மகிழ்வார்கள்.

குறிப்பாக, வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தீய சக்திகளை நல்லவை வெற்றி பெற்றதின் மகிழ்ச்சி கொண்டாட்டமாக ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வண்ண, வண்ண வண்ணப்பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

holi-cricketer-celebrate-viral-photo