'உங்கள் மகளின் வீடியோ உள்ளது' - போலியான அழைப்பால் பறிபோன ஆசிரியை உயிர்

Uttar Pradesh
By Karthikraja Oct 05, 2024 08:30 PM GMT
Report

உயிர் போலியான அழைப்பு மூலம் ஆசிரியர் ஒருவரின் உயிர் பறிபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் கால்

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மால்தி வர்மா (58). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் கல்லூரி படிக்கும் மகள் உள்ளனர். 

agra teacher

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி மதியம் 12மணியளவில், மால்திக்கு வாட்ஸ்அப்பில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அழைப்பு விடுத்தவரின் வாட்ஸ் அப் டிபியில் போலீஸ் உடை அணிந்த ஒருவரின் புகைப்படம் இருந்தது. 

தேனி கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை; எல்லாம் பொய் - காவல்துறை பரபரப்பு

தேனி கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை; எல்லாம் பொய் - காவல்துறை பரபரப்பு

மகளின் வீடியோ

அழைப்பில் பேசியவர், உங்கள் மகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, போலீஸில் பிடிப்பட்டிருக்கிறார். நான் கூறும் வங்கி கணக்கில் உடனடியாக ரூ 1 லட்சம் பணம் செலுத்த வேண்டும். இல்லையெனில் இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். 15 நிமிடங்களில் 10 முறை அந்த மிரட்டல் கால் வந்துள்ளது. 

agra fake phone call to teacher

இதனையடுத்து, மிகுந்த அச்சமடைந்த மால்தி தனது மகனிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அது பாகிஸ்தானிலிருந்து வந்த ஸ்கேம் கால் அதனால் பயப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறியுள்ளார். மேலும் தனது சகோதரிக்கு கால் செய்து அவர் கல்லூரியில் இருப்பதை உறுதி செய்து தாயிடம் தெரிவித்துள்ளார்.

மாரடைப்பால் மரணம்

ஆனாலும் கவலை தீராத மால்தியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனையடுத்து அவரை மருத்துவமனைக்குஅழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மால்தி மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு அவருக்கு இதயம் சார்ந்த எந்த பிரச்னையும் இல்லை என அவரது மகன் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.