வகுப்பறையில் ஆசிரியையிடம் ஆபாசமாக பேசிய மாணவர்கள் - தொடர்ந்து தொல்லை!

Uttar Pradesh Crime
By Sumathi 2 மாதங்கள் முன்

பெண் ஆசிரியரிடம் மாணவர்கள் வகுப்பறையில் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் ஆசிரியை

உத்தரப் பிரதேசம், மீரட் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு வகுப்பில், பெண் ஆசிரியரிடம் மாணவர்கள் தகாத முறையில் பேசியுள்ளனர். பள்ளியில் அந்த பெண் ஆசிரியர் நடந்து செல்லும் போதெல்லாம், I Love U என்று கூச்சலிட்டுள்ளனர்.

வகுப்பறையில் ஆசிரியையிடம் ஆபாசமாக பேசிய மாணவர்கள் - தொடர்ந்து தொல்லை! | Up Students Who Misbehaved With Their Teacher

மேலும், அதனை வீடியோகவும் எடுத்து, அவற்றை போலி கணக்குகள் மூலம் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. அதில், அந்த ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும்போது, மாணவர்கள் தகாத முறையில் மோசமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

ஆபாச கமெண்ட்

அவரிடம் ஐ லவ் யூ என சொல்வதாகவும் தெரிகிறது. தொடர்ந்து வகுப்பில் இருக்கும் மாணவிகள் அதனைக் கேட்டு சிரிக்கின்றனர். அதனையடுத்து ஆசிரியை அந்த மாணவர்களை பல முறை எச்சரித்துள்ளார்.

ஆனால் அதற்கு அவர்கள் செவி சாய்க்காமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை மாணவர்கள் மீது புகாரளித்துள்ளார். அதன்படி, வீடியோக்களின் மூலம் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.