ரோந்து பணியின்போது தகாத முறையில் நடந்து கொண்ட போலீஸ் - சுற்றி வளைத்த பொது மக்கள்
ராஜபாளையம் அருகே தனியாக இருக்கும் பெண்களின் வீட்டை குறிவைத்து இரவு நேரத்தில் வீட்டின் கதைவை தட்டி உல்லாசத்துக்கு அழைத்த போலீசார்.
பொது மக்கள் சேர்ந்து காவல் நிலையத்தில் போலீசாரை ஒப்படைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேல ராஜகுல ராமன் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் கபிலன் என்ற முதல் நிலை காவலர் ரோந்து பணிக்கு சென்ற போது ரோந்து பணிக்கு முதுகுடி பகுதியில் ஆண்கள் இல்லாத பெண்களின் வீட்டை கதவைத்தட்டி கதவைத்திறந்த பெண்களை தகாத முறையில் அழைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் ஊரைக்கூட்டி தவறாக நடந்து கொள்ள முயன்ற போலீசாரை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைராகி வருகிறது.