சிறையில் மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்திய எம்எல்ஏ - ஆய்வில் அதிர்ச்சி
எம்எல்ஏ ஒருவர் சிறையில் தனது மனைவியுடம் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
சிறையில் குடித்தனம்
உத்திர பிரதேசத்தில் பாரதிய சுகல் தேவ் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி. இவர் ஹவாலா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவருக்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு சொகுசு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
அதனால் இவருடன் அவரது மனைவி நிக்கத் பானுவும் சிறையில் தங்கி இருப்பதற்கு அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து, சிறை கண்காணிப்பாளர் அசோக் சாகர் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக எஸ்பி பிருந்தா சுக்லாவுக்கு புகார் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆட்சியர் அபிஷேக் ஆனந்துக்கு எஸ்பி தகவல் அளித்துள்ளார்.
சிக்கிய எம்எல்ஏ
அதன்பின், ஆட்சியரும் எஸ்பியும் ரகசியமாக தனியார் வாகனத்தில் சிறைக்குச் சென்று சோதனை நடத்தியுள்ளனர். அதில் சிறை கண்காணிப்பாளர் அசோக்கின் அலுவலக வேலை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. கதவை உடைத்து பார்த்த போது உள்ளே அப்பாஸ் அன்சாரியும் அவரது மனைவியை நிக்கத் பானுவும் இருந்துள்ளனர்.
மேலும், சாட்சிகளை மிரட்டுதல், பணம் பறிப்பு போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
அதனையடுத்து, அன்சாரியிடம் இருந்த இரண்டு செல்போன்கள் , பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் , தங்க நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.