Fortuner காரே தான் வேணுமாம் - அடம்பிடித்து கல்யாணத்தை நிறுத்திய மணமகன்!
ஃபார்ச்சூனர் கார் கொடுக்காததால் மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
வரதட்சணை கொடுமை
உத்தரப்பிரதேசம், காஜியாபாத்தைச் சேர்ந்தவர் சித்தார்த் விஹார். இவர் அரசுக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதில் மணமகனுக்கு வரதட்சணையாக பெண்ணின் குடும்பத்தினர் வேகன்ஆர் காரை முன்பதிவு செய்திருக்கின்றனர்.

இதற்கிடையில், திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே சித்தார்த் விஹார் வரதட்சணையாக ஃபார்ச்சூனர் காரைக் கேட்டிருக்கிறார். ஆனால், மணமகள் குடும்பத்தினர், ஏற்கெனவே கார் முன்பதிவு செய்யப்பட்டதாகவும், அதை மாற்றக்கூடிய சூழல் இப்போது இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மணமகன் அட்டூழியம்
இந்நிலையில் தான் கேட்ட கார் கிடைக்காததால், திருமணத்தை நிறுத்தப்போவதாக மணப்பெண்ணின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார்
மணமகன்மீது காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர்.
அதன் அடிப்படையில், அவர் மீது வரதட்சணைச் சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.