இனி கோயில்களில் இதுதான் பிரசாதம் - நிர்வாகம் அதிரடி முடிவு!
பதப்படுத்தப்பட்ட பொருள்களை பிரசாதமாக கொண்டு வர கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பிரசாத சர்ச்சை
திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்ட விவாகரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு அங்கு உள்ள அனைத்து கோயில்களிலும் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்தி பிரசாதம் தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
தற்போது உத்தர பிரதேசம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் இனிப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருள்களை பிரசாதமாக கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகம் தடை
அங்குள்ள அலோபி சங்கரி தேவி கோயில், அனுமன் கோயில், மங்காமேஷ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள், இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்குப் பதிலாக தேங்காய், பழங்கள், உலர் பழங்கள் ஆகியவற்றைக் கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து லலிதா தேவி கோயிலின் தலைமை அர்ச்சகர் ஷிவ் முராத் மிஸ்ரா கூறுகையில், இனி பிரசாதமாக இனிப்பு வழங்கப்படாது என கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பக்தர்கள் தேங்காய், பழங்கள், உலர் பழங்கள், ஏலக்காய் போன்றவற்றை கொண்டுவருமாறு கூறியிருக்கிறோம்.
கோயில் வளாகத்தில் சுத்தமான இனிப்புகளை விற்கும் கடைகளை திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.