திருப்பதி லட்டு விவகாரம் - பாவத்தை போக்க பவன் கல்யான் அதிரடி முடிவு

Pawan Kalyan Andhra Pradesh
By Karthikraja Sep 22, 2024 08:08 AM GMT
Report

திருப்பதி லட்டு விவகாரத்தில் பாவ மன்னிப்பு கிடைக்க பவன் கல்யாண் அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளார்.

திருப்பதி லட்டு

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. 

tirupathi laddu

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 

பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதா? உண்மை என்ன?

பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதா? உண்மை என்ன?

பவன் கல்யாண்

இந்நிலையில் இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க கடும் தவம் இருக்கபோவதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்தது குறித்து நான் மிகவும் வேதனையடைந்தேன். அனைவருக்கும் இந்த துயரமான தருணத்தில் வலிமை தருமாறு வெங்கடேசப் பெருமானைப் பிரார்த்திக்கிறேன். 

இந்த தருணத்தில், நான் கடவுளிடம் மன்னிப்புக் கோரி, பரிகார சபதம் எடுத்து, 11 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுக்கிறேன்.11 நாள் பரிகார தீட்சை முடிவில் அக்டோபர் 1, 2-ம் தேதிகளில் திருப்பதி சென்று ஏழுமலையானை நேரில் தரிசனம் செய்து பாவமன்னிப்புக் கோரி, பிறகு இறைவனிடம் பரிகாரத் தீட்சை நிறைவு செய்வேன்” என குறிப்பிட்டுள்ளார்.