பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதா? உண்மை என்ன?

BJP Ghee Dindigul
By Karthikraja Sep 20, 2024 12:00 PM GMT
Report

பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக பாஜக நிர்வாகி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

திருப்பதி லட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். 

tirupathi laddu lab report

இதனையடுத்து வெளியான ஆய்வறிக்கையில் திருப்பதி லட்டு தயாரிக்கப்படும் நெய்யில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் இருக்கின்றன என உறுதிப்படுத்தியது. 

திருப்பதி லட்டு விவகாரம் - மாட்டு கொழுப்பு நெய் தமிழ்நாட்டில் இருந்து சென்றதா?

திருப்பதி லட்டு விவகாரம் - மாட்டு கொழுப்பு நெய் தமிழ்நாட்டில் இருந்து சென்றதா?

பழனி பஞ்சாமிர்தம்

இந்நிலையில் தமிழக பாஜக, தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யபட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்னி இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற உத்தமர் ராஜசேகர்தான் (AR Foods ) பழனி முருகன் கோவிலுக்கும் நெய் சப்ளை செய்கிறார். 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இப்படிபட்ட ஒரு நல்லவரைதான் பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமித்துள்ளது சனாதன ஒழிப்பு திமுக அரசு. கடந்த 2022ம் ஆண்டு திமுக நியமித்த புதிய அறங்காவலர் பொறுப்பேற்ற பிறகுதான் பழனி பஞ்சாமிர்தத்தின் தரம் கெட்டு போயுள்ளது.

ஆவின் நெய்

பழனி பஞ்சாமிர்தம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சப்ளை செய்யபடும் நெய்யை பரிசோதனை செய்தால் உண்மை தெரியவரும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். 

இதை தொடர்ந்து இதற்கு விளக்கமளித்துள்ள, தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் இது வதந்தி என்றும் பழனி பஞ்சாமிர்தம் செய்ய நெய் ஆவினில் இருந்து வாங்குவதாக அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.