இனி பெயருக்கு பின்னால் ஜாதி கூடாது - முதல்வர் அதிரடி உத்தரவு!
பெயர்களுக்கு பின்னால் உள்ள ஜாதிய ரீதியான அடையாளங்களை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜாதி அடையாளம்
அலகாபாத் உயர் நீதிமன்றம், "காவல்துறை சம்மந்தப்பட்ட நபர்களின் ஜாதியை பதிவு செய்வதை நிறுத்த வேண்டும். இது சட்ட ரீதியான சரியான நடைமுறை இல்லை.
நம் அரசியலமைப்பு மரபை குறைத்து மதிப்பிடுவது போல் உள்ளது." என்று உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, காவல்துறை பதிவுகள், பொது இடங்கள், அதிகாரபூர்வ ஆவணங்கள், வாகனங்கள் ஆகியவற்றில் ஜாதிய பாகுபாட்டை நீக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு உத்தரவு
இதற்காக அனைத்துத் துறைகளுக்குமான உத்தரவை மாநில தலைமைச் செயலாளர் தீபக் குமார் பிறப்பித்துள்ளார்.
அதில், "கைது குறிப்பாணைகள், முதல் தகவல் அறிக்கை, தகவல் பலகை, விளம்பர பலகை, வாகனங்கள் உள்ளிட்ட அனைத்திலும் உள்ள ஜாதிய அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும். சம்மந்தப்பட்டவர்களின் பெற்றோர் பெயரை அடையாளத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதை உடனடியாக அமல்படுத்துவதற்காக கையேடு மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.