காதலனை தோழியுடன் உறவுக்கு வற்புறுத்திய காதலி - மறுத்ததால் உறுப்பை துண்டித்த கொடூரம்!
காதலனின் அந்தரங்க உறுப்பை காதலி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
உத்தரப் பிரதேசம், கான்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த சில வருடங்களாக அதேப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த இளைஞருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது.
இந்நிலையில், காதலி அவரை சந்திக்க அழைத்துள்ளார். தொடர்ந்து, இளைஞரும் சென்றதில், மற்றொரு பெண்ணை தோழி என அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர், மூவரும் பேசிக் கொண்டிருக்கையில்,
காதலி வெறிச்செயல்
தோழியுடன் உடலுறவு வைத்துக்கொள்ள காதலனை, இளம்பெண் கேட்டுள்ளார். ஆனால் இளைஞர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலி அவரின் அந்தரங்க உறுப்பை கடித்திருக்கிறார்.
இதனால் அலறிய இளஞரின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அதனையடுத்து, இளைஞரின் மனைவி சம்பவம் குறித்து அறிந்து போலீசில் புகாரளித்துள்ளார்.
அதன்படிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.