அருள் வாக்கு சொன்ன சாமியார்... - அந்தரங்க உறுப்பை வெட்டி துண்டித்த இளம் பெண் - கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கங்கேசானந்தா சுவாமி. இவர் அப்பகுதியில் பல பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறி வந்தார். பலர் இந்த சாமியாரிடம் தங்களுடைய குறைகளையும், உடல் பிரச்சினைகளையும் கூறி வந்தனர்.
தங்களுடைய பிரச்சினைகளை சாமியார் தீர்த்து வைப்பார் என்று நம்பி இவரை தேடி படையெடுத்து மக்கள் வந்தனர். இதனால், அவரிடம் மக்கள் கூட்டம் குவிந்து வந்தது.
கடந்த 2017ம் ஆண்டு ஒரு நள்ளிரவில் கங்கேசானந்தா சாமியாரின் அந்தரங்க உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் கீழே மயங்கி கிடந்தார். இதைப் பார்த்த பக்தர்கள் ஒரு சிலர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து, கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இந்த வழக்கில் பக்தையாக இருந்த பெண் ஒருவர் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அப்பெண், 'சாமியார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டதால் மர்ம உறுப்பை அறுத்தேன்' என போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சாமியாரிடம் பக்தையாக இருந்த அப்பெண், தன் காதலன் அய்யப்ப தாஸ் என்பவருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அதற்கு சாமியார் தடையாக இருந்து வந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த இருவரும் திட்டமிட்டு சாமியாரின் அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, இந்த வழக்கில் அந்த இளம்பெண் மற்றும் அவரது காதலனை சேர்க்க, சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.