மாணவிக்கு கொடூரமாக பாலியல் வன்கொடுமை - தூக்கில் தொங்கவிட்டு தப்பியோடிய இளைஞர்!
கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்று வாலிபர் தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
உத்தரபிரதேசம், நாக்லா ஷிஷாம் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. சம்பவத்தன்று அவரது தந்தை வேலையின் காரணமாக மெயின்புரிக்கு சென்றிருக்கிறார். மாணவியின் தாயார் ஆக்ராவிற்கு சென்று இருக்கிறார்.
மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருந்திருக்கிறார். இதனை அறிந்த இளைஞர், வீட்டில் தனியாக இருந்த மாணவியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின், அவரை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு தூக்கில் தொங்கவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
மாணவி கொலை
இந்நிலையில், பயிற்சி வகுப்புக்காக சென்ற மாணவியின் தங்கை மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்த போது இளைஞர் ஒருவர் தனது அக்காவை கழுத்தை நெறித்துக் கொன்று தூக்கில் மாட்டுவது தெரிய வந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியான சிறுமி போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில்,
இந்த சம்பவத்தில் ஈடுபட்டது புஷ்பேந்திரா என்கிற 20 வயது இளைஞர் என்பது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து, விரைவில் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் கமலேஷ் தீட்சித் தெரிவித்துள்ளார்.