மருத்துவமனையில் திடீரென பற்றிய தீ - 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பலி!

Uttar Pradesh Fire Death
By Sumathi Nov 16, 2024 05:04 AM GMT
Report

அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்து

உத்தரப் பிரதேசம், மகாராணி லட்சுமி பாய் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

uttar pradesh

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், அங்கு பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் 10 பச்சிளம் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

40 குழந்தைகள் பலி; குறிவைக்கும் வைரஸ் - அதிகரிக்கும் அபாயம்

40 குழந்தைகள் பலி; குறிவைக்கும் வைரஸ் - அதிகரிக்கும் அபாயம்

10 குழந்தைகள் பலி

16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தால், மேலும் சில உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் திடீரென பற்றிய தீ - 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பலி! | Up Fire Hospital Electrical Leak 10 Children Died

முதற்கட்ட விசாரணையில், ஷார்ட் சர்க்யூட் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.