40 குழந்தைகள் பலி; குறிவைக்கும் வைரஸ் - அதிகரிக்கும் அபாயம்
இந்தியாவில் சில இடங்களில் அடினோ வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
அடினோ வைரஸ்
நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகிய உடல் உறுப்புகளை பாதிக்கக்கூடிய வைரஸ் குழு தான் அடினோ வைரஸ். பெரியவர்களை விட குழந்தைகள் தான் இந்த வைரஸால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்த அடினோ வைரஸ் பாதிப்பால் கடந்த 9 நாட்களில் மட்டும் 40 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 6 குழந்தைகள் இந்த வைரஸால் உயிரிழந்தனர். இத்துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடினோ வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்கு என்று இதுவரை எந்த மருந்தும் பரிந்துரைக்கப்படவில்லை. இதனால், அடிக்கடி கைகளை சோப்பு அல்லது சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும் படி இந்திய சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.