மனைவிக்கு பிரசவம் - மருத்துவமனை செலவுக்கு 3 வயது மகனை விற்ற தந்தை
மனைவியின் பிரசவ செலவுக்கு பணமில்லாத நிலையில் 3 வயது மகனை விற்க கட்டாயப்படுத்தியுள்ளனர்.
6வது குழந்தை
உத்தரபிரதேச மாநிலம் பர்வா பாட்டியை சேர்ந்தவர் ஹரீஸ் படேல். இவருக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளனர்.
இவரின் மனைவி லக்ஸ்மினாவுக்கு தற்போது 6 வது குழந்தை பிறந்துள்ளது.கூலித்தொழிலாளியான ஹரிஷ் படேலுக்கு ஏற்கனவே கடன் இருக்கும் நிலையில் மருத்துவமனை சிகிச்சை கட்டணமான ரூ 4,000 செலுத்த பணமில்லை.
மகனை விற்க அழுத்தம்
பிரசவ சிகிச்சைக்கு உரிய பணத்தை கட்டாமல், மனைவியையும், பிறந்த குழந்தையையும் மருத்துவமனையிலிருந்து அனுப்ப முடியாது என்று மருத்துமனையில் இருந்த ஊழியர்கள் கறாராக சொல்லிவிட்டார்கள்.
இதனால், என்ன செய்வதென தெரியாமல் தவித்து நின்ற ஹரீஸ் படேலுக்கு அப்போது, 3 வயது மகனை, குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்றுவிட்டால், மருத்துவமனையின் கட்டணத்தை செலுத்தி விடலாம் என்று அங்கிருந்த சிலர் ஹரீஷ் படேலுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
கைது
வேறுவழியில்லாத நிலையில் தனது 3வயது குழந்தையை ரூ20,000 க்கு விற்க ஹரீஸ் படேலும் விற்றுள்ளார். இதற்காக போலா யாதவ் - கலாவதி என்ற தம்பதியினரிடம் பேசி, 3 வயது மகனை விற்பனை செய்ய, அமரீஸ் யாதவ் என்ற நபர் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார்.
थाना बरवापट्टी क्षेत्रांतर्गत अपने 03 वर्ष के बच्चे को किसी अन्य व्यक्ति को देने के प्रकरण में बच्चे को सकुशल बरामद कर लिया गया है तथा आरोपी के विरुद्ध सुसंगत धाराओं में अभियोग पंजीकृत कर अग्रिम आवश्यक विधिक कार्यवाही की जा रही है इस संबंध में क्षेत्राधिकारी तमकुहीराज की बाइट- pic.twitter.com/knYLxNcj2I
— Kushinagar Police (@kushinagarpol) September 7, 2024
இந்நிலையில் இது குறித்து தகவலறிந்த காவல் துறை உடனடியாக சென்று குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இடைதரகர் அமரீஸ் யாதவ், குழந்தையை தத்தெடுக்க முயன்ற தம்பதிகள் போலா யாதவ் - கலாவதி, போலி மருத்துவர் தாரா குஷ்வாஹா, மருத்துவமனை உதவியாளர் சுகந்தி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு காவலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.