எய்ட்ஸ் பாதித்த கர்ப்பிணி..தொட மறுத்த டாக்டர்ஸ் - 6 மணி நேரம் துடித்த கொடூரம்!

Pregnancy Uttar Pradesh Crime HIV Symptoms
By Sumathi Nov 23, 2022 05:30 PM GMT
Report

எய்ட்ஸ் பாதித்த பெண்ணுக்கி சிகிச்சை மறுக்கப்பட்டதால் பிறந்த சிசு உயிரிழந்துள்ளது.

எச்ஐவி பாதிப்பு

உத்தரப் பிரதேசம், பிரோசாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது பெண். இவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர். மேலும் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்தப் பெண் தேசிய எய்ட்ஸ் தடுப்பு அமைப்பின்(NACO) தொடர் கண்காணிப்பில் இருந்தவர்.

எய்ட்ஸ் பாதித்த கர்ப்பிணி..தொட மறுத்த டாக்டர்ஸ் - 6 மணி நேரம் துடித்த கொடூரம்! | Up Doctor Refused Touch Hiv Pregnant Lady

இவரின் தந்தைக்கு பிரசவ கால நடவடிக்கை குறித்து அலுவலர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரது தந்தை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்கு ரூ.20,000 கட்டணம் செலுத்த கூறியுள்ளனர். இவரிடம் பணம் இல்லாததால்,

சிசு பலி

அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அந்தப் பெண்ணுக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பதை மருத்துவர்கள் அவரை தொட கூட மறுத்துள்ளனர். மருத்துவ பணியாளர்கள் கூட அருகில் செல்லாமல் இருந்துள்ளனர். இதனால் பிற்பகல் 3 மணிக்கு அனுமதிக்கப்பட்ட பெண் சுமார் 6 மணி நேரம் பிரசவ வலியில் படுக்கையில் துடித்துள்ளார்.

யாரும் கண்டுகொள்ளாத நிலையில், இரவு 9 மணி அளவில் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக குழந்தை உயிரிழந்துள்ளது. இதனையடுத்து பெண்ணின் தந்தையின் புகாரின் பேரில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் துறை ரீதியாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.