எங்க புல்லட் போடுறது; துப்பாக்கியை கையாள தெரியாம திணறிய போலீஸ் - ஆடிப்போன ஐஜி!
ஐஜி ஆய்வு செய்த நிலையில், அங்கு இருந்த உதவி ஆய்வாளர் உள்பட யாருக்கும் துப்பாக்கி கையாள தெரியாத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் ஆய்வு
உத்தரப்பிரதேசம், கோத்வாலியில் உள்ள சண்ட் கபிர் நகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில், காவல் துறை ஐஜி ஆர்.கே. பரத்வாஜ் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, கலிலாபாத் காவல் நிலையத்தில், ரைஃபிள் துப்பாக்கியை லோட் செய்யுமாறு உதவி காவல் ஆய்வாளரிடம் கூறியுள்ளார்.

ஆனால், அந்த உதவி ஆய்வாளர் துப்பாக்கி லோட் செய்ய தெரியாமல் திணறியுள்ளார். மேலும், துப்பாக்கியின் குண்டை, குழாய் வழியாக வைத்து லோட் செய்ய வேண்டும் என அந்த உதவி ஆய்வாளர் கூறியுள்ளார்.
தோட்டா போட தெரியல..
இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ங்கிருந்த எந்த காவலருக்கும் துப்பாக்கியைக் கொண்டு சுட தெரியவில்லை. கண்ணீர் புகைக்குண்டு துப்பாக்கியும் ஒரு பாதுகாப்பு அதிகாரிக்கு இயக்க தெரியவில்லை என்பது தெரியவந்தது.
यूपी पुलिस के "मुंह से ठायं ठायं" की अपार सफलता के बाद पेश है बंदूक के "मुंह में गोली डालकर ठायं ठायं" pic.twitter.com/uL3uwaTQX4
— Sandeep Singh ?? (@KaunSandeep) December 27, 2022
அதனையடுத்து, எந்தவொரு எதிர்பாராத சம்பவத்திற்கும் தயாராக இருக்கும் வகையில் பயிற்சியைத் தொடருமாறு காவலர்களுக்கு ஐஜி வலியுறுத்தினார்.