மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி : மாஸ் காட்டிய அஜித், வைரலாகும் வீடியோ
திருச்சியில் மாநில துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25-ம் தொடங்கியது.
திருச்சியில் துப்பாக்கி சுடும் போட்டி
இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு 16, 19, 21 ஆகிய வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கும், 21 முதல் 45 வயது, 45 முதல் 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது.
அஜித் பங்கேற்பு
பிஸ்டல் துப்பாக்கி சுடுவதற்கான போட்டியாளர்களுக்கு 28-ந் தேதி வரை போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
Video Of #AK #AjithKumar At Trichy Rifle Club this morning.. ? #AK61 pic.twitter.com/4kNGsY6w5H
— Ramesh Bala (@rameshlaus) July 27, 2022
29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ரைபிள் துப்பாக்கி சுடுபவர்களுக்கான போட்டிகள் நடக்கின்றன. இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest video of #Ajithkumar sir in Trichy Rifle Club ? #AK61 pic.twitter.com/J2SDNgllLB
— ? Chocoboy Thala Addicter ? (@ChocoNithin) July 27, 2022
இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.