காரில் இப்படியா ஊர்வலம் போவாங்க; மணமகளுக்கு அபராதம் - வைரல் வீடியோ
மணமகள் காரின் முன்பக்கம் அமர்ந்து ஊர்வலம் வந்த வீடியோ வைரலாகி வருகிறது.
காரில் ஊர்வலம்
திருமணத்தை ஒட்டியே டிரெண்டிங் ரீல்ஸ் வீடியோக்கள் பல தற்போது வலம் வருகின்றன. இதனை வேடிக்கையாக காட்டுவதே வாடிக்கை நிகழ்வாக மாறிவிட்டது. அப்படி ஒரு வினோத செயலில் ஈடுபட்ட வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேசம், பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து, அப்பெண் திருமண கோலத்தில் ஊர்வலமாக சென்றுள்ளார். அந்தப் பெண் SUV கார் ஒன்றின் முன்பக்கமுள்ள போனெட்(Bonnet) பகுதியின் மேல் அமர்ந்து
வைரல் வீடியோ
ஆடம்பர உடை, நகை என மணக் கோலத்தில் சாலையில் ஊர்வலம் வருகிறார். இது குறித்த வீடியோ வேகமாக பரவிய நிலையில், போலீசார் கவனத்திற்கும் சென்றது. கார் கூரை மீது இவ்வாறு அமர்ந்து பயணிப்பது மோட்டார் வாகன சட்டவிதிகளுக்கு புறம்பானது.
இதனால் கார் எண்ணைக் கொண்டு பெண்ணை அடையாளம் கண்டு ரூ.15,500 அபராதம் விதித்தனர்.
மேலும், வீடியோவை விமர்சித்து நெட்டிசன்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.